பள்ளிக்கூடம் சென்று வீடு திரும்பிய பிளஸ்-1 மாணவி திடீர் தற்கொலை

பள்ளிக்கூடம் சென்று வீடு திரும்பிய பிளஸ்-1 மாணவி திடீர் தற்கொலை.

Update: 2022-07-26 19:47 GMT

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது இளைய மகள் யோகலட்சுமி (வயது17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற யோகலட்சுமி, மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. திடீரென அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் இந்த விபரீத முடிவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து மாரனேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்