பொதுத்தேர்வில் தோல்வியால் பிளஸ்-1 மாணவி தற்கொலை
கெலமங்கலம் அருகே பொதுத்தேர்வில் தோல்வியால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை:
பிளஸ்-1 மாணவி தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள கொளதாளம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகள் சந்தான ஸ்ரீ. இவர் தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மாணவி சந்தானஸ்ரீ தோல்வி அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.
இதனை பார்த்த அவரது பெற்றோர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சோகம்
இதுகுறித்து மாணவியின் தந்தை பாபு கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுத்தேர்வில் தோல்வியால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.