ரூ.39 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு உழவு எந்திரங்கள்

நாகையில் விவசாயிகளுக்கு ரூ.39 லட்சம் மானிய விலையில் உழவு எந்திரங்களை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

Update: 2023-09-06 18:45 GMT


நாகையில் விவசாயிகளுக்கு ரூ.39 லட்சம் மானிய விலையில் உழவு எந்திரங்களை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

உழவு எந்திரங்கள்

நாகையில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் எந்திர மயமாக்கல் உப திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் உழவு எந்திரம் (பவர் டில்லர்) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு பவர் டில்லர் எந்திரங்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் வேளாண் எந்திரமயமாக்கல் உப திட்டம் 2023-24-ன் கீழ் விவசாயிகளுக்கு பவர் டில்லர் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சியை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ரூ.39 லட்சம் மானியம்

அதை தொடர்ந்து நாகையில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள 46 விவசாயிகளுக்கு (அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ரூ.85 ஆயிரம் மானியத்தில்) மொத்த மானிய தொகை ரூ.39 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் 46 பவர் டில்லர் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில ஆத்மா திட்டக்குழு தலைவர் மகா குமார், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பழனிசாமி, உதவி செயற்பொறியாளர் நடராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்