கார் மோதி நேரு சிலையின் பீடம் சேதம்

கார் மோதி நேரு சிலையின் பீடம் சேதம்

Update: 2022-07-02 19:16 GMT

மதுரை தமுக்கம் மைதானம் எதிரே உள்ள நேரு சிலை 1989-ம் ஆண்டு முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியால் திறந்து வைக்கப்பட்டது. அந்த சிலை அமைக்கப்பட்டு இருந்த பீடத்தில் நேற்று இரவு ஒரு கார் மோதியது. இதில் பீடத்தின் சுவர் சேதமடைந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் சிலை முன்பு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, காரையும் பறிமுதல் செய்தனர். இதனால் மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்