தர்மபுரி:
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் வாக்களிப்பதே சிறந்தது-நிச்சயம் வாக்களிப்பேன் என்ற தலைப்பில் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் மாதையன், மேலாளர் முத்துக்குமார், நகரமைப்பு அலுவலர் ஜெயஸ்வர்மன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.