டாக்டர்கள் நியமிக்கப்படுவார்களா?

திருமக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு டாக்டர்கள் நியமிக்கப்படுவார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-09-06 18:09 GMT

திருமக்கோட்டை;

திருமக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு டாக்டர்கள் நியமிக்கப்படுவார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சுகாதார நிலையம்

திருமக்கோட்டையில் மெயின் ரோட்டில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் பார்வதி அம்மாள் பழனியப்பா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆஸ்பத்திரி திருமக்கோட்டையை மையமாக கொண்டு செயல்படுவதால் சுற்றுவட்டார கிராமமான 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் 5 டாக்டர்கள், 5-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 2 ஆண் டாக்டர்கள், 2 செவிலியர்கள் மட்டும் உள்ளனர்.

போராட்டம்

இந்த சுகாதார நிலையத்துக்கு கர்ப்பிணி பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெண் டாக்டா்கள் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து திருமக்கோட்டை பார்வதி அம்மாள் பழனியப்பா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு டாக்டர்கள் மற்றும் போதிய அளவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் கூறியுள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்