தேனி மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு

தேனி மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு வருகிற 10-ந்தேதி நடக்கிறது.

Update: 2022-07-06 16:29 GMT

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில், 16 வயதுக்குட்பட்டோருக்கான மதுரை மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டிகள் வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை ராமநாதபுரத்தில் நடக்கிறது.

இதில் பங்கேற்க தேனி மாவட்ட ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு வீரர்கள் தேர்வு வருகிற 10-ந்தேதி காலை 7 மணி அளவில் தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

இதில் 1-1-2006-க்கு பிறகு பிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று பயன்பெறலாம். இந்த தகவலை தேனி மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் அஸ்வின் நந்தா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்