மாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து சாவு
மாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து இறந்தான்
மதுரை புதூர் கண்ணனேந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40), தனியார் நிறுவன மேலாளர். இவரது மகன் ஜெயதர்ஷன் (10), வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. சம்பவத்தன்று ஜெயதர்ஷன் 2-வது மாடியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன் தவறி கீழே விழுந்தான். இதில் தலையில் பலத்த அடிப்பட்ட ஜெயதர்ஷன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.