பெங்களூரு கால்பந்து அணியில் விளையாட நீலகிரி வீரர்களை தேர்வு செய்யும் பணி

பெங்களூரு கால்பந்து அணியில் விளையாட நீலகிரி வீரர்களை தேர்வு செய்யும் பணி நடந்தது.

Update: 2022-07-03 11:50 GMT

கோத்தகிரி

பெங்களூரு கால்பந்து அணியில் விளையாட நீலகிரி வீரர்களை தேர்வு செய்யும் பணி நடந்தது.

கால்பந்து வீரர்கள் தேர்வு

கர்நாடக மாநிலம் பெங்களூரு சூப்பர் ஸ்ட்ரைக்கர்ஸ் கால்பந்து குழு ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்டத்தில் கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் சிறுவர்களை தேர்ந்தெடுத்து தகுதி பெற்ற பயிற்சியாளர்களால் ஒரு மாதம் சிறப்பு பயிற்சி வழங்கி தங்களது அணியில் விளையாட வைத்து வருகிறது. இதற்காக இளம் வீரர்களை தேர்வு செய்யும் பணி நேற்று பெங்களூரு சூப்பர் ஸ்ட்ரைக்கர்ஸ் கால்பந்து அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து வீரர்கள் தேர்வில் 8 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட சுமார் 50 இளம் கால்பந்து வீரர்கள் பங்கேற்றனர். 9, 11, 13, 15, 18 மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட வீரர்களை விளையாட வைத்து தேர்வு நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை வெளிப்படுத்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சிறப்பு பயிற்சி

2-ம் கட்டமாக நேற்று ஊட்டி எச்.ஏ.டி.பி. மைதானத்தில் கால்பந்து வீரர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு பெறும் கால்பந்து வீரர்களுக்கு பெங்களூருவில் தங்குமிடம், உணவு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு, ஒரு மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து அவர்கள் பெங்களூரு பேங் ரோர் சூப்பர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாட உள்ளதாகவும், கடந்த ஆண்டு தேர்வான நீலகிரி மாவட்ட வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும் தேர்வாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்