பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

வேதாரண்யத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-03-31 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. விழிப்புணர்வு பிரசாரத்தை நகராட்சி ஆணையர் ஹேமலதா தொடங்கி வைத்தார். நகராட்சி பொறியாளர் முகமது இப்ராகிம் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு ஊர்வலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவிகள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல், குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி சென்றனர். மேலும் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் தீமை குறித்தும், குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டிய அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்