பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கபிஸ்தலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் ஊராட்சியில் கால்நடை ஆஸ்பத்திரி அருகில் இருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் தூய்மையே சேவை திட்டத்தில் செப்டம்பர் 15-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை குப்பை இல்லா இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) மகாலட்சுமி பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். வட்டார துணை ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் (பொறுப்பு) சரவணன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், ஊராட்சி உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கபிஸ்தலம் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, கால்நடை மருத்துவர் வடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பதால் ஏற்படும் பயன் குறித்து விளக்கி கூறினர். இந்த ஊர்வலம் கபிஸ்தலம் பவுண்ட் பகுதியில் தொடங்கி முக்கிய வீதி வழியாக சென்று கபிஸ்தலம் மின்சார வாரிய அலுவலகம் அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், மக்கள் நல பணியாளர், உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.