தேவகோட்டை
தேவகோட்டை நகரில் சுற்றுச்சூழலை வளமானதாக மாற்றுவதற்காக நகராட்சி நிர்வாகத்துடன் சேர்ந்து தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேசகரங்கள் தன்னார்வ அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் பால்துரை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
நகராட்சி ஆணையாளர் சாந்தி, நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளே பயன்படுத்த வேண்டும், நெகிழிப்பை ஒழிப்போம், நம் பூமியை காப்போம் போன்ற பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அப்போது நெகிழிப்பை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர்.