மலையில் எரியும் தீயினால் செடி, கொடிகள் நாசம்

வேலூர் சார்பனாமேடு மலையில் எரியும் தீயினால் செடி, கொடிகள் நாசமானது.

Update: 2023-02-19 18:01 GMT

வேலூர் மாநகராட்சியில் வேலூர், சத்துவாச்சாரி, சைதாப்பேட்டை, ஓல்டு டவுன், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளை சுற்றி மலைகள் உள்ளன. அங்கு செடி, கொடிகள் மற்றும் மரங்கள் ஏராளமாக காணப்படுகிறது. கோடை காலம் வந்தாலே வெயில் தாக்கத்தினால் மரம், செடி, கொடிகள் மற்றும் புற்கள் காய்ந்து விடும். அவற்றை சமூக விரோதிகள் தீயிட்டு எரிக்கும் சம்பவம் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிறது.

இந்தாண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. வேலூர் சார்பனாமேடு மலையில் உள்ள செடி, கொடி, மரங்கள் மற்றும் புற்களை சமூக விரோதிகள் வைத்த தீயினால் எரிந்து நாசமாகின. மேலும் அங்குள்ள பறவைகள், உயிரினங்கள் வெப்பம் தாங்க முடியாமல் அந்த இடத்தை விட்டு சென்றது. தொடர்ந்து ஒவ்வொரு கோடை காலமும் வேலூரை சுற்றியுள்ள மலைகளில் சமூக விரோதிகள் தீ வைக்கும் அட்டூழியம் நீடித்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்