ஆடுகளை விஷம் வைத்து கொன்ற தோட்ட உரிமையாளர் கைது
நெல்லை அருகே ஆடுகளை விஷம் வைத்து கொன்ற தோட்ட உரிமையாளர் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை சத்திரம் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவருக்கு சொந்தமான தோட்டம் நெல்லையை அடுத்த வேப்பங்குளத்தில் உள்ளது. சம்பவத்தன்று இந்த இடத்தில் வேப்பங்குளம் மணி நகரை சேர்ந்த பெருமாள் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 9 ஆடுகளும், சந்தனராஜ் என்பவருக்கு சொந்தமான 6 மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென கால்நடைகள் அனைத்தும் வாயில் நுரை தள்ளி மயங்கி கிடந்தன. இதில் 9 ஆடுகள் இறந்தன.
இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் தோட்ட உரிமையாளர் கோபாலிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் குருனை மருந்தை தண்ணீரில் கலந்து கால்நடைகள் மேயும் செடிகளில் தெளித்து ஆடுகளை கொன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்தனர். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு 6 மாடுகளும் காப்பாற்றப்பட்டன.