இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2023-10-02 18:45 GMT

மின்நிறுத்தம்

மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, நீடூர், கடலங்குடி, பாலையூர், பெரம்பூர் ஆகிய 5 துணை மின் நிலையங்களிலும் ஒரு சில மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான எலந்தங்குடி, அரிவேலூர், பெருஞ்சேரி, கங்கணம்புத்தூர், தாழஞ்சேரி, கொற்கை, பாலையூர், காரனூர், பருத்திக்குடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

கடலங்குடி

மேலும் வாணாதிராஜபுரம், கடலங்குடி, கிளியனூர், மலக்குடி, எடக்குடி ஆகிய கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்