வெங்கடேஸ்வரா கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு

வெங்கடேஸ்வரா கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு

Update: 2023-07-13 23:41 GMT

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தகுதிரை வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை சார்பில் இதழியல் மற்றும் ஊடக வேலை வாய்ப்புகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஆ.மோகனசுந்தரம் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். பத்திரிகையாளர் பண்டரிநாதன் மயில்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இதழியல் மற்றும் ஊடக வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார். இதில் துணை முதல்வர் சி.நஞ்சப்பா, மாணவி ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக மாணவி ரமிதா வரவேற்று பேசினார். முடிவில் கணிதத்துறை தலைவர் பி.ஆரோக்கியராஜ் நன்றி கூறினார். கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை கணிதத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்