பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியம், அம்மன்குறிச்சியில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிவில் ஆடித்திருவிழா கடந்த 2-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒற்றை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து பிடாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது. அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.