தோகைமலையில் இருந்து சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள்

தோகைமலையில் இருந்து சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.

Update: 2023-02-13 18:52 GMT

தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் பக்தர்கள் பாதையாத்திரையாக செல்வதற்கு அனைவரும் விரதம் இருந்தனர். இதையடுத்து நேற்று பாதாயாத்திரையாக புறப்பட அனைவரும் தயாரானார்கள்.

முன்னதாக ஆதனூர் செல்வ விநாயகர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், அங்காளபரமேஸ்வரி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சமயபுரம் மாரியம்மனை எழுந்தருள செய்து வீதி உலா வந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. பின்னர் ேதாகைமலையில் இருந்து சமயபுரத்திற்கு நடைபயணமாக பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்