தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் நடந்தது.

Update: 2022-09-06 21:04 GMT

திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் பகுதியில் உள்ள பட்ட மரத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் நித்தியானந்தபுரம் முத்துக்கண் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக கடந்த மாதம் 21-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த ஏராளாமான பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றிலிருந்து குடங்களில் புனிதநீரை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று மாலை கோவில்களில் முதல் கால யாக பூஜையும், இன்று (புதன்கிழமை) 2-ம், 3-ம் கால யாக சாலை பூஜைகளும், நாளை (வியாழக்கிழமை) அதிகாலை நான்காம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 10.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகும். 10.50 மணிக்கு மேல் 2 கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்