மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் கூட்டம் நடந்தது.;

Update:2023-03-18 03:14 IST

கும்பகோணம்;

கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கும்பகோணம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கோரிய மனுக்கள் மீது விசாரணை நடத்தி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. வருகிற நிதியாண்டில் 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி 100 நாட்கள் வேலை வழங்க உத்தரவாதம் கேட்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு கணினி பயிற்சி வழங்கும் போது எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கும், நகர பகுதியில் வாழ்பவர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்