மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை கூட்டம்

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது

Update: 2022-09-19 20:47 GMT

கும்பகோணம்;

கும்பகோணத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க துணைச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பழ. அன்புமணி, முன்னாள் மாவட்ட துணை தலைவர் சுகுமார், தி.மு.க. தாராசுரம் பேரூராட்சி செயலாளர் சாகுல்அமீது, ஒன்றிய பொறுப்பாளர் காமாட்சி, பொருளாளர் ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் செல்லத்தக்க ஒரே அடையாள சான்று வழங்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ.3 ஆயிரம் மற்றும் கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 4 மணி நேர வேலைக்கு முழு ஊதியமான, ரூ.283 வழங்க வேண்டும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வங்கிக்கடன், இலவச வீடு, வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். இணையதளம் மூலம் பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும், உடனடியாக பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்