போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு -ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது

போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது.

Update: 2023-02-06 20:43 GMT


போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது.

உடல் தகுதி தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை போலீசாருக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. அதன்படி மதுரை நகர், மாவட்டம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 665 பெண்களுக்கு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. அதே போன்று தேர்வு பெற்ற 1,170 ஆண்களுக்கு பட்டாலியன் மைதானத்திலும் உடல் தகுதி தேர்வு நடந்தது.

பெண்களுக்கான முதல் கட்ட தகுதி தேர்வுக்கு 335 பேர் அழைக்கப்பட்டனர். அதில் 57 பெண்கள் வரவில்லை. மீதி உள்ள 272 பெண்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் கணக்கீடுதல், 400 மீட்டர் ஓட்டம் போன்றவை நடத்தப்பட்டது. அதில் இறுதியாக 178 பேர் தேர்வு பெற்றனர். மீதி உள்ளவர்களுக்கு இன்றும் தேர்வு நடைபெறுகிறது.

மதிப்பெண்கள்

அவ்வாறு தேர்ச்சி பெறுபவர்களுக்கு நாளை (8-ந் தேதி) 2-ம் கட்ட உடல் தகுதி தேர்வு நடைபெறும். அதில் 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் அல்லது எரிபந்து போட்டி நடைபெறும். இந்த இரண்டு தகுதி தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்களில் முன்னிலை பெறுபவர்கள் மட்டும் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த தேர்வில் சிறப்பு அதிகாரியாக மதுரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் பங்கேற்றார். மதுரை கமிஷனர் அலுவலக தலைமையிட போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த்கோயல் தலைமையில் தேர்வு பணிகள் நடைபெற்றது.

மயங்கி விழுந்தனர்

தகுதி தேர்வில் பெண்கள் ஆர்வத்துடன் வந்து பங்கேற்றனர். ஒரு சில பெண்கள் 400 மீட்டர் ஓட்டத்தை ஓட முடியாமல் சிரமப்பட்டனர். அவர்களையும் உடன் இருந்தவர்கள் உற்சாகப்படுத்தி பந்தய தூரத்தை கடக்க வைத்தனர். ஒரு சில பெண்கள் ஓடி முடிந்த உடன் மயங்கி கீழே விழுந்தனர். அவர்களை அங்கிருந்த மருத்துவக்குழுவினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.

இதே போன்று ஆண்களுக்கான தேர்வு பட்டாலியன் மைதானத்தில் நடந்தது. இதில் முதல்கட்டமாக 400 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, மார்பளவு, உயரம் போன்றவை கணக்கிடப்பட்டது. தொடர்ந்து 1,500 மீட்டர் ஓட்டம் நடந்தது. இதில் தேர்வு பெறுபவர்கள் 2-ம் கட்ட உடல் தகுதித்தேர்வுக்கு தகுதி பெறுபவார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்