மத்திய அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
ஆம்பூரில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ஆம்பூர் பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி, கருத்தரங்கு, கலை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆம்பூர் எம்.எல்.ஏ.வில்வநாதன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி விழாவை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வினாடி வினா போட்டியில் முதல் 3 இடத்தை பிடித்து வெற்றி பெற்ற கே.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார். விழாவில் அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.