ரூ.14½ லட்சத்துடன் பெட்ரோல் பங்க் ஊழியர் மாயம்

வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.14½ லட்சத்துடன் பெட்ரோல் பங்க் ஊழியர் மாயம்

Update: 2023-01-19 18:45 GMT

கோவை சின்னியம்பாளையம் சின்னதோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கோவை- அவினாசி ரோடு சின்னியம்பாளையத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்.

அங்கு ஊழியராக விஜயகுமார் பணியாற்றி வந்தார். அவரிடம் முத்து சாமி ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்து வங்கியில் செலுத்து மாறு கூறி காரை கொடுத்து அனுப்பினார்.

ஆனால் அவர் சென்று நீண்டநேரம் ஆகியும் திரும்பி வர வில்லை. தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

வங்கிக்கு சென்று விசாரித்த போது விஜயகுமார் அங்கு செல்ல வில்லை என்பதும், குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டு சென்றதும் தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்