கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது - அண்ணாமலை

கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2023-10-25 11:55 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

ராஜ்பவன் மீது இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது. முக்கியமில்லாத விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக மும்முரமாக இருக்கும்போது, குற்றவாளிகள் தெருக்களில் இறங்கிவிட்டனர்.

கடந்த 2022-ம் ஆண்டு சென்னையில் உள்ள பாஜக தமிழ்நாடு தலைமை அலுவலகத்தைத் தாக்கிய அதே நபர்தான் இன்று ராஜ்பவன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்தத் தொடர் தாக்குதல்கள், திமுக அரசுதான் இந்தத் தாக்குதல்களுக்கு நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்பொழுதும் செய்வது போல் அடுத்து திசை திருப்புவதற்கு தயாராகி வருகிறார்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்