மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறினார்.

Update: 2022-06-10 13:19 GMT

திருவண்ணாமலை

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறினார்.

பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பவன்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அவரை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த டாக்டர் கே.கார்த்திகேயன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து இன்று அவர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

விரைந்து நடவடிக்கை

கஞ்சா, சாராயம், ரவுடிசம், திருட்டு, வழிப்பறி மற்றும் இதர குற்றச்செயல்களை கணிசமாக குறைக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும் மாவட்டத்தின் அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் காக்க முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனது பணியை சொல் மூலம் இல்லாமல் செயலில் காட்ட விரும்புகிறேன்.

இவர் அவர் கூறினார்.

முதுகலை பல் மருத்துவம்

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக்கொண்ட டாக்டர் கே.கார்த்திகேயன் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இவர் முதுநிலை பல் மருத்துவம் படித்துள்ளார். கன்னியாகுமரியில் ஐ.பி.எஸ். பயிற்சி முடித்துவிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக 1½ ஆண்டு பணியாற்றியுள்ளார். பின்னர் சுமார் ஒரு ஆண்டு சென்னை கீழ்பாக்கத்தில் துணை கமிஷனராக பணியாற்றி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்