சாலை ஆக்கிரமிப்பை தடுக்க வலியுறுத்தி நடுப்பட்டி மக்கள் கலெக்டரிடம் மனு

சாலை ஆக்கிரமிப்பை தடுக்க வலியுறுத்தி நடுப்பட்டி ஊராட்சி மக்கள் கலெக்டர் கார்மேகத்திடம் மனு கொடுத்தனர்.

Update: 2022-11-29 22:40 GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். காடையாம்பட்டி தாலுகா நடுப்பட்டி ஊராட்சி பகுதி மக்கள் சிலர் நேற்று கலெக்டர் கார்மேகத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நடுப்பட்டி ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நடுப்பட்டியில் இருந்து மதனபெருமாள் கோவில் வரை தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகிறோம். மேலும் ஊரை சுற்றி உள்ள பல்வேறு கோவில்களுக்கு செல்லவும் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

மாற்றுத்திறனாளி

இந்த சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே நடுப்பட்டியில் இருந்து மதனபெருமாள் கோவில் வரை செல்லும் தார் சாலையில் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

இதே போன்று முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட 316 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளி ஒருவருக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ரூ.8 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர சைக்கிள் வழங்கினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர்கள் மயில், துரைமுருகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்