செங்கோட்டையில் புறவழிச்சாலை அமைக்கக்கோரி அமைச்சரிடம் மனு

செங்கோட்டையில் புறவழிச்சாலை அமைக்கக்கோரி அமைச்சர் எ.வ.வேலுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-05-23 18:45 GMT

செங்கோட்டை:

தென்காசிக்கு வருகை தந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் செங்கோட்டை நகர தி.மு.க. செயலாளா் வக்கீல் ஆ.வெங்கடேசன் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

செங்கோட்டை நகர் வழியாக அண்டை மாநிலமான கேரளாவுக்கு பால், அரிசி, சிமெண்டு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் செங்கோட்டை நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, திருவிழாக்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும்போது போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகமாகி பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே செங்கோட்டை நகர பகுதி தொடங்கி முடிகிற வரையிலான பிரானூர், நித்தியகல்யாணி அம்மன் கோவில் காலாங்கரை, சுப்பன்செட்டி பாலம் வரையிலான புறவழிப்பகுதி வழியாக பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் பலதரப்பட்ட வாகனங்கள் வந்து செல்லும் வகையில் புறவழிச்சாலை அமைத்தால் அது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் மிகுந்த உதவியாக இருக்கும். எனவே தாங்கள் செங்கோட்டை நகருக்கு புறவழிச்சாலை அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்