புதிய குடிநீர் தொட்டி அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு

கீழப்பாவூர் அருகே புதிய குடிநீர் தொட்டி அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-09-27 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கழுநீர்குளம் ஊரில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது அந்த தொட்டியின் தூண்கள் அனைத்திலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே அந்த தொட்டியை அகற்றிவிட்டு, அதன் அருகில் மாவட்ட கலெக்டரின் சிறப்பு நிதியில் உடனடியாக குடிநீர் தொட்டி அமைத்து தருமாறு, மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் பொதுமக்கள் சார்பில் யூனியன் கவுன்சிலர் மகேஸ்வரி சத்யராஜ் கோரிக்கை மனு கொடுத்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்