அர்ஜூன் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மனு- மதுரை ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு

அர்ஜூன் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மனு- மதுரை ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு

Update: 2023-06-12 20:41 GMT


இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு திண்டுக்கல் பிரஸ் கிளப் பகுதியில் முறையான அனுமதியின்றி கூடியதாகவும், மதப் பிரச்சினையை தூண்டும் விதமாக பேசியதாகவும் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் நான் உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது, திப்பு சுல்தானுக்கு மணிமண்டபம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததாகவும், மலைக்கோட்டை பகுதியில் அபிராமி அம்மன் சிலையை வைக்க வேண்டும் எனவும் பேசியதாகவும், மத கலவரம் ஏற்படும்சூழல் உருவானதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதுபோல நாங்கள் பேசவில்லை. எனவே எங்கள் மீது திண்டுக்கல் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் அரசு வக்கீல் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, மனுதாரர் மீதான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்