கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலவாரியம் அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலவாரியம் அமைக்கக்கோரி தென்காசி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-12-12 18:45 GMT

தென்காசி மாவட்ட தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் முருகானந்தம், செயலாளர் முத்தையா, பொருளாளர் செந்தில்குமார் மற்றும் சங்கத்தினர் குடும்பத்தினருடன் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'கேபிள் டி.வி. நிலுவைத்தொகை என்ற பெயரில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை பயன்படுத்தி, கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை குற்றவாளிகள் போல் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும். இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்கிவிட்டு தற்போது பொதுமக்களால் செயலிழப்பு செய்யப்பட்ட பாக்ஸ்களுக்கு அவற்றின் கிரையத்தொகை என்று சொல்லி பெருந்தொகையை கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்