மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்த கோரி கலெக்டரிடம் மனு

மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்த கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2022-10-12 20:38 GMT

மக்கள் விழிப்புணர்ச்சி பேரவை சார்பில் அதன் தலைவர் பொன்.முருகன், துணை பொதுச்செயலாளர் ஞானசேகர் கலெக்டர் பிரதீப் குமாரிடம் அளித்த மனுவில், "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் யு.பி.எஸ்.சி. தகுதி தேர்வில் தமிழ்மொழியிலும் வினாக்கள் கேட்கப்பட வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்தி மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூலிக்க அனுமதி அளித்தது வருந்தத்தக்கது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் 90 சதவீதம் தமிழகத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களை பணியமர்த்த வேண்டும். பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்" என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது. அப்போது நிர்வாகிகள் வக்கீல் மாரியப்பன், சக்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்