அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்
மயிலாடுதுறையில் அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் பா.ஜ.க. சார்பில் நடந்தது
மயிலாடுதுறையில், பா.ஜ.க. பட்டியல் அணியை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் வெங்கட்ராஜ் தலைமை தாங்கினார்.மாவட்ட துணைத்தலைவர் அய்யா.சுரேஷ் முன்னிலை வகித்தார். பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையை தமிழக அரசு பெருமளவில் வேறு திட்டங்களுக்கு செலவிட்டு வருவதாக குற்றம் சாட்டி, பா.ஜ.க. பட்டியல் அணியை சேர்ந்தவர்கள் மயிலாடுதுறையில் உள்ள அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராம.சிவசங்கர், கட்சியின் நகர தலைவர் வினோத், முன்னாள் நகர தலைவர் மோடி கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.