இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.

Update: 2023-06-14 21:58 GMT

அருப்புக்கோட்டை, 

காரியாபட்டி வட்டத்திற்குட்பட்ட அல்லாளபேரி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டு ஊரை விட்டு வெளியேறி காரியாபட்டியில் தஞ்சமடைந்த 30 குடும்பங்களுக்கு காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஜெ.ஜெ.காலனியில் அரசால் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இந்த இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்ட இடத்தில் மேற்படி மக்கள் வீடுகட்டி குடியிருந்து வருகிறார்கள். இந்தநிலையில் காலனியில் கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் இவர்களுக்கு தனித்தனியாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் கருப்பையா தலைமையில் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தங்கள் பெயரிலோ, தங்கள் கணவர் பெயரிலோ சொந்தமாக வீடு இல்லாமல் சிரமம் அடைந்து வருகின்றோம். தங்களுக்கு ஏதாவது இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மாநில மாணவரணி செயலாளர் பீமாராவ் சாக்யா, ராவ்பகதூர், ரெட்டைமலை சீனிவாசன், மக்கள் நல இயக்க தலைவர் ரத்தினசாமி மற்றும் பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்