அடிப்படை வசதி கேட்டு மனு

அடிப்படை வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-04-24 19:03 GMT


விருதுநகர் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராம மக்கள் சார்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- தங்கள் கிராமத்திற்கு மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாத நிலையில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டும் பலன் இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

காரியாபட்டி தாலுகா அச்சங்குளம் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில், மாந்தோப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அம்மன், ஸ்ரீ வால குருநாத சாமி கோவில் திருவிழாவினை பிரச்சினை இல்லாமல் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்