மஞ்சநாயக்கன அள்ளி ஊராட்சிக்குஒதுக்கீடு செய்த இடத்தில் வேறு நபர்களுக்கு பட்டா வழங்க கூடாதுகிராம மக்கள் கலெக்டரிடம் மனு

Update: 2023-02-27 19:00 GMT

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். தர்மபுரியை சேர்ந்த சிறு தள்ளுவண்டி வியாபாரிகள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்டோர் சாலையோர பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் நடத்தி வருகிறோம்.

தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே சாலையோர பகுதிகளில் வியாபாரம் நடத்தும் எங்களிடம் சிலர் ஒரு கடைக்கு தலா ரூ.1,000 மாமுல் தர வேண்டும் என்கிறார்கள். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பென்னாகரம் தாலுகா மஞ்சநாயகன அள்ளி ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் சாந்தியிடம் அளித்த கோரிக்கை மனுவில், நரசிபுரம் காலனி, சின்ன கடைமடை காலனி, பெரிய கடமடை காலனி ஆகிய பகுதிகளில் 350-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கிறோம். எங்களுக்கு வீட்டு மனை வழங்க ஒதுக்கீடு செய்த இடத்தில் வேறு ஊராட்சியை சேர்ந்த 95 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எங்கள் பகுதிக்கு இலவச மனை பட்டா வழங்க ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்குவதை தடை செய்ய வேண்டும். எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கிய பின், வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்