மங்களபுரம் மக்காச்சோள மாவு தயாரிக்கும் தொழிற்சாலையை இயக்க உத்தரவிட வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழிலாளர்கள் மனு

மங்களபுரம் மக்காச்சோள மாவு தயாரிக்கும் தொழிற்சாலையை இயக்க உத்தரவிட வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழிலாளர்கள் மனு

Update: 2022-09-12 17:43 GMT

ராசிபுரம் தாலுகா மங்களபுரத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மல்லிகாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மங்களபுரம் கிராமத்தில் மக்காச்சோள மாவு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அதில் தொழிலாளர்களாக சுமார் 150 பேர் பணியாற்றி வருகிறோம். கடந்த 28.6.2022 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை காரணம் காட்டி, ஆலையின் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. அதில் இருந்து இதுவரை எங்களுக்கு வேலையில்லை, சம்பளமில்லை என அறிவிப்பு ஒட்டி உள்ளனர்.

இதற்கிடையே தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி சில அறிவுரைகளை வழங்கினர். அதன்பிறகும் இதுவரை தொழிற்சாலை இயங்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உடனடியாக தொழிற்சாலையை இயக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்