நலத்திட்ட உதவி பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

நலத்திட்ட உதவி பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்

Update: 2023-07-23 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- 2023-2024-ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தும் திட்டங்களான கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கி கடன் மானியம், திருமண உதவித்தொகை மற்றும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 வழங்குதல் ஆகிய திட்டங்களின் கீழ் எளிதாக மாற்றுத்திறனாளிகள் நேரடியாக விண்ணப்பித்து பயன்பெறும் வகையில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx, என்ற இணையதளம் மூலமாக மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, யு.டி.ஐ.டி. அட்டை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்