ரூ.57 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது

ரூ.57 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-21 16:10 GMT

ரூ.57 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

பண மோசடி

வேலூர் காகிதப்பட்டறை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது 48). இவர் கடந்த 2018 -2019-ம் ஆண்டுகளில் திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர், குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட அரசு பணிகள் வாங்கித் தருவதாக பணம் பெற்றுள்ளார்.

ஆனால் அவர் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன்மூலம் அவர் ரூ.57 லட்சத்து 45 ஆயிரம் வரை பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

கைது

இந்த நிலையில் வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணிடம் ரேஷன் கடையில் விற்பனையாளர் பணியிடம் வாங்கி தருவதாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார்.

மேலும் அவர் கூறியதன் பேரில் சிலர் சுகுமாரிடம் பணம் கொடுத்துள்ளனர்.

வேலை வாங்கி தராததால் கொடுத்த பணத்தை ரேவதி திரும்ப கேட்டுள்ளார்.

பணத்தை திருப்பிக் கொடுக்காததால் இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனிடம் புகார் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து சுகுமார் தலைமறைவானார். அவரை பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் பதுங்கி இருந்த சுகுமாரை, துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். சுகுமார் அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்