சின்ன கல்லாறு நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதி

காட்டுயானைகள் நடமாட்டத்தால் தடை விதிக்கப்பட்ட சின்ன கல்லாறு நீர்வீழ்ச்சிக்கு செல்ல ஓராண்டுக்கு பிறகு வனத்துறை அனுமதி வழங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-01-20 18:45 GMT

சின்ன கல்லாறு

காட்டுயானைகள் நடமாட்டத்தால் தடை விதிக்கப்பட்ட சின்ன கல்லாறு நீர்வீழ்ச்சிக்கு செல்ல ஓராண்டுக்கு பிறகு வனத்துறை அனுமதி வழங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சின்ன கல்லாறு நீர்வீழ்ச்சி

மலைப்பிரதேசமான வால்பாறையானது, மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு பசுமையான தேயிலை தோட்டங்கள், மலைமுகடுகளை மோதிச்செல்லும் மேகக்கூட்டங்கள், அடர்ந்த வனப்பகுதிகள் ேபான்ற இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது வால்பாறை பகுதியில் இதமான காலநிலை நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் வால்பாறை அருகே அட்டக்கட்டி பகுதியில் சின்ன கல்லாறு நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்ததால், கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளுக்கு மானாம்பள்ளி வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சின்ன கல்லாறு நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வனத்துறையினரை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

கூடுதல் காவலர்கள்

இதற்கிடையில் அங்கு புதர் செடிகளை வெட்டி அகற்றும் பணி நடைபெற்றது. மேலும் வேட்டை தடுப்பு காவலர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று முதல் சின்ன கல்லாறு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மானாம்பள்ளி வனத்துறையினர் அனுமதி வழங்கினர். அங்கு செல்ல சிங்கோனா வனத்துறை சோதனைச்சாவடியில் நபருக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தூரிப்பாலம்

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, சின்ன கல்லாறு நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதி வழங்கியது வரவேற்ககத்தக்கது. அங்குள்ள தூரிப்பாலத்தின் மீது நடந்து செல்ல பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அது சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால் விபத்து நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அந்த தூரிப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்றனர்.

மானாம்பள்ளி வனத்துறையினர் கூறுகையில், ஓரிரு நாட்களில் தூரிப்பாலம் சீரமைக்கப்பட்டு, சிரமமின்றி சுற்றுலா பயணிகள் சின்ன கல்லாறு நீர்வீழ்ச்சியில் குளிக்க வசதிகள் செய்து தரப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்