அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் நிரந்தர மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும்

திருமருகல் அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் நிரந்தர மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-07 19:15 GMT

திருமருகல் அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் நிரந்தர மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு கால்நடை ஆஸ்பத்திரி

நாகை மாவட்டம் திருமருகலில் அரசு கால்நடை ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு திருமருகல், கரையிருப்பு, சேகல், வள்ளுவன்தோப்பு, ஆண்டித்தோப்பு, கட்டலாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கால்நடைக்கு மருத்துவம் பார்க்க வந்து செல்கின்றனர்.

மேலும் மழைக்காலங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் வேகமாக பரவுகிறது. இந்தநிலையில் திருமருகல் அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் கால்நடை மருத்துவர், நிரந்தர கால்நடை பராமரிப்பு உதவியாளர், நிரந்தர கால்நடை ஆய்வாளர் இல்லை. இதனால் கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

நடவடிக்கை

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நிரந்தர டாக்டர் உள்பட இதர மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்