பெரியார் கலைக்கல்லூரியில் 3-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் 3-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை நடைபெற உள்ளது.

Update: 2023-06-17 18:45 GMT

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கைக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்தது. இந்த இரண்டு கட்ட கலந்தாய்வுகளிலும் கட்-ஆப் 250 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ-மாணவிகள் அனைத்து பாடங்களிலும் சேர்க்கை பெற்றுள்ளனர். மேலும் இரண்டு கட்ட கலந்தாய்வுகளிலும் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்ற இடங்களுக்கான 3-வது கட்ட கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இதில் நாளை, பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பு, பட்டியல் இன அருந்ததியர், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த ஏற்கனவே விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. மேலும் 240 மற்றும் அதற்கு மேல் கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 20-ந் தேதியும், 239 முதல் 230 வரை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 21-ந் தேதியும் கலந்தாய்வு நடக்கிறது.

மாற்றுச்சான்றிதழ்

கலந்தாய்வில் பங்குபெறுவோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்கள், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டையின் இரண்டு நகல்கள் மற்றும் உரிய சேர்க்கைக் கட்டணம் ஆகியவற்றை கட்டாயமாக கொண்டு வரவேண்டும். விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் சேர்க்கை கலந்தாய்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலமாகவும், மாணவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை admission@pacc.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேசுவரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்