பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா
பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாண்டனேரி கரையில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் கோவிலின் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கணபதி ஹோமமும், அம்பாளுக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகமும் நடந்தது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் அன்னதானமும், வருகிற 25-ந் தேதி இரவு அம்மன் திருவீதி உலாவும், 26-ந் தேதி மயான கொள்ளை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கிறது.