பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா

சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Update: 2023-02-18 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா மகா சிவராத்திரியான நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சாமி வீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற 26-ந் தேதி மயான கொள்ளையும், 27-ந் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்