பெரியகுளம் கோர்ட்டில்பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்

பெரியகுளம் கோர்ட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2023-07-06 18:45 GMT

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில், பெரியகுளம் கோர்ட்டு வளாகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பெரியகுளம் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி கணேசன் தலைமை தாங்கினார். பெரியகுளம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான மாரியப்பன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் வக்கீல்கள் போலீசார், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மாஜிஸ்திரேட்டு கமலநாதன், வக்கீல் சங்க தலைவர் அம்பாசங்கர், அரசு மருத்துவமனை சித்தா டாக்டர்கள் சர்மிளாதேவி, கண்மணி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்