பெரிய மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
பெரிய மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு நடந்துள்ளது.
தரகம்பட்டி அருகே தேவர்மலை ஊராட்சி சீதப்பட்டியில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூட்டு நேற்று காலை உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியலை மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.