பெரிய மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

வாய்மேடு அருகே பெரிய மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

Update: 2022-08-21 17:22 GMT

வாய்மேடு,

வாய்மேடு அருகே ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி நல்லான் குத்தகையில் பெரிய மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், லெட்சுமி பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று நான்காம் கால பூஜைகள் நடந்து கடம் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் பெரிய மாரியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்