தீவிபத்து குறித்து செயல்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தீவிபத்து குறித்து செயல்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கூத்தாநல்லூர்:
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அரசு ஆஸ்பத்திரிகளில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு தீயணைப்பு வீரர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்திரியில் நேற்று கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீவிபத்து குறித்து செயல்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர். அப்போது தீ விபத்து ஏற்படாமல் தடுக்கும் முறைகள், தீ விபத்தில் காயம் அடைந்தவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தால் அதனை அணைக்க கையாளும் முறை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். இதில் அரசு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.