பெரம்பலூர் குறுவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர் குறுவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன.;

Update:2022-08-31 00:23 IST

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக பெரம்பலூர் குறுவட்ட அளவிலான கைப்பந்து, கால்பந்து வாலிபால், இறகுபந்து, எறிபந்து, பூப்பந்து, மேஜைப்பந்து, கோகோ ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் 14 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 850 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வெங்கலம் செல்வகுமார் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் நடத்தினர்.

இதில் வாலிபால் போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பெரம்பலூர் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கவுல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியும், கைப்பந்து போட்டியில் பெரம்பலூர் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், இறகுப்பந்து போட்டியில் மரகதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆருத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், கூடைப்பந்து போட்டியில் கோல்டன்கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், எறிபந்து போட்டியில் லெப்பைக்குடிகாடு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், மேஜைப்பந்து போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி அணியும் வெற்றி பெற்றன.

பூப்பந்து போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உடும்பியம் ஈடன்கார்டன் பள்ளியும், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் வெற்றி பெற்றன. பெரம்பலூரில் நேற்று மதியம் சிறிது நேரம் விளையாட்டு மைதான பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கபடி, கோகோ, கால்பந்து ஆகிய போட்டிகளுக்கான இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்று, இறுதிப்போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. போட்டி நடைபெறும் தேதி பிறகு அறிவிக்கப்படும் என்று மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்