மக்கள் அதிகாரத்தினர் ஆர்ப்பாட்டம்
மக்கள் அதிகாரத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் காளியப்பன் கண்டன உரையாற்றினார். இதில் மாமன்ற உறுப்பினர் தண்டபாணி, ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.